/* */

இராசிபுரம் நகராட்சியில் ரூ.3.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

இராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில், வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

இராசிபுரம் நகராட்சியில் ரூ.3.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
X

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ரூ.3.16கோடி மதிப்பில், வளர்ச்சித் திட்டப்பணிகளை, அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர்.

இராசிபுரம் நகராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா, டிஆர்ஓ கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில், 38 கடைகள், 48 திறந்தவெளிக் கடைகள், 2 வாகன நிறுத்துமிடம் மற்றும் காய்கறி ஏற்றி, இறக்குமிடத்துடன் கூடிய தினசரி மார்க்கெட் கட்டும் பணிகளையும், வார்டு எண் 8 பகுதியில் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணியையும், 15 -வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளையும் அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்