இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு

இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு
X

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நோயாளியின் வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

இராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆயில்பட்டியில் ரூ.6.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, நாவல்பட்டி ஊராட்சி ந.உடையார்பாளையம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணி, திம்மநாய்க்கன்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, மத்ரூட்டு பஞ்சாயத்து கணவாய்மேடு கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

பின்னர், ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருந்து, மாத்திரைகள அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் செல்வராஜ், ஜெயக்குமார், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!