வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும், பஞ்சாயத்து அலுவலகம் கட்டுமானப்பணிகளை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.291.46 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலம் மற்றும் அலவாய்ப்பட்டிபஞ்சாயத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தையும் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து இன்ஜினியிர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், பழந்தின்னிப்பட்டி பஞ்சாயத்தில், 1.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் 350 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார், அப்போது, மரக்கன்றுகளை சுற்றி வேலி அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மசக்காளிப்பட்டி பஞ்சாயத்து, மூலக்காடு கிராமத்தில் ரூ.39.31 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைக்கும் பணியை பார்வையிட்டு அதன் தரத்தை சோதனை செய்து பார்த்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
ஆய்வின் போது, டிஆர்டிஓ திட்ட இயக்குனர் வடிவேல், வெண்ணந்தூர் பிடிஓ பிரபாகரன், இன்ஜினியர்கள் ஸ்ரீனிவாசன், கவுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu