இராசிபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி

இராசிபுரம் அருகே திமுக சார்பில் பொங்கல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் ட வுன் பஞ்சாயத்து திமுக சார்பில், குருசாமிபாளையத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் சுழற்கோப்பைக்கான பொங்கல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மொத்தம் 24 அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்கள். பரிசளிப்பு விழாவில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ஸ்குல் பாய்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார். குருசாமிபாளையத்தைச் சேர்ந்த ரெட் ரோஸ் அணிக்கு 2ம் பரிசாக ரூ.10 ஆயிரம், ராசிபுரம் ஜேசி என்சிசி அணிக்கு 3ம் பரிசாக ரூ.8 ஆயிரம், நந்தவனம் நண்பர்கள் அணிக்கு 4ம் பரிசாககு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், பேரூர் திமுக செயலாளர் சுப்ரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பாலசுப்ரமணியன், பாலச்சந்திரன், அரசு வக்கீல் செல்வம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu