மாஸ்க் போடலைன்னா 5 நாட்கள் கடைக்கு சீல்: ராசிபுரத்தில் கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல் கலெக்டர் மெக்ராஜ்
ராசிபுரம்: 'கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்' நாமக்கல் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்து இருப்பதாவது:
பழமைவாய்ந்த சிவன் கோவில் குளத்தை, சிவ பக்தர்கள், இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனம் சேர்ந்து தூர்வாருவது பாராட்டுக்குரியது. இப்பகுதியில் 90 சதவீத பேர் மாஸ்க் அணிந்திருப்பது வரவேற்புக்குரியது. பஸ்களில் நின்றபடி, பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அதை மீறி பயணிகள் பஸ்களில் நின்றபடி சென்றால், ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மேலும், வியாபாரிகளுக்கு வியாபாரம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. மாஸ்க் அணியாமல் யாரும் வந்தால் வியாபாரிகளே மாஸ்க் தந்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். கடையில் இருப்பவர்கள், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். முதல் தடவை கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதற்கு அடுத்த நாள் பார்த்தால் கடைகள் 5 நாட்களுக்கு சீல் வைக்கப்படும். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் 15 முதல், 20 நபர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள்.ஆனால், தற்போது 80 முதல் 90 பேர் வரை பாதிப்பு அதிகமாகியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். இதுவரை, கொரோனா கட்டுப்பாட்டை மீறியதற்காக, 70 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஆகியோர் அபராதம் வசூலித்து வருகின்றனர். இவ்வாறு கலெக்டர் கூறினார். நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu