இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.5 கோடிக்கு பருத்தி விற்பனை
இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ஏலம் விடுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.
இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டது. பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டி கிளையில் (ஆர்சிஎம்எஸ்) பருத்தி ஏலம் நடைபெற்றது. முத்துகாளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருச்செங்கோடு, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.
ஏலத்திற்கு, ஆர்.சி.எச். ரக பருத்தி 4,427 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 59 மூட்டைகளும், கொட்டு பருத்தி 208 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 4,694 பருத்தி மூட்டைகள், ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. இதில் ஆர்.சி.ஏச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8,539-க்கும், அதிகபட்சமாக ரூ.10,019க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.11,502 முதல் அதிகட்சமாக ரூ.14,739க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3,850 முதல் அதிகபட்சமாக ரூ.5,525க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பருத்தி அதிக விலைக்கு போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu