இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.45 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.45 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

பைல் படம்.

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.45 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

இராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்க (ஆர்சிஎம்எஸ்) கிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு முத்துகாளிபட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 267 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

திருச்செங்கோடு, கொங்கானபுரம், சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில், ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 439 முதல், ரூ.10 ஆயிரத்து 599 விரை ஏலம் போனது. டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 700 முதல் ரூ.15 ஆயிரத்து 500-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 520 முதல், ரூ.7 ஆயிரத்து 100-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.45 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Tags

Next Story
ai based healthcare startups in india