இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏலம்

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏலம்
X

பைல் படம் 

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (ஆர்சிஎம்எஸ்) ரூ.6 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியின், அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, அக்கரைப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

சேலம், ஈரோடு, கோவை, அவிநாசி, திருப்பூர், ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில்கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 509 வரை ஏலம் போனது. மொத்தம் 201 மூட்டை பருத்தி ரூ.6 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!