/* */

ராசிபுரம் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் பகுதியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு  மண்டலத்தில்  கலெக்டர் ஆய்வு
X

ராசிபுரம் அருகில் உள்ள குருசாமிபாளையத்தில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வாகனங்களை நிறுத்தி ஆய்வு  செய்தார்.

ராசிபுரம் பகுதியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற்று உள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவாக குணமடையலாம் என்பதற்காக, சுகாதாரத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும், காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய சுகாதாரப்பணியாளர்களுடன், தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீடுகளில் ஒரு தன்னார்வலருக்கு 100 பொதுமக்கள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதையும், ஆக்ஸிஜன் அளவு குறித்து கண்டறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ள பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கி அவர்களை முதல் நிலையிலேயே கொரோனாவிலிருந்து காக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளினால் ஆக்ஸிஜன் மிகவும் குறைந்த நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் வருவது தடுக்கப்படுகிறது.

இதையொட்டி ராசிபுரரும் பகுதயில் உள்ள, பிள்ளாநல்லூர் பேரூராட்சி, கூனவேலம்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்சாக்சிமீட்டர் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவு கணக்கீடு செய்யப்படுவதையும், வப்பநிலை கணக்கீடு செய்யப்படுவதையும் மாவட்ட கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிப்பட்டி, காக்காவேரி, வேலம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளிலும், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, தொ.ஜேடர்பாளையம், தொப்பம்பட்டி, பச்சுடையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து குருசாமிபாளையத்தில் வாகனங்களில் செல்பவர்கள் அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகளை

முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்டறிய வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வுகளில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகநாதன், பிஆர்ஓ சீனிவாசன், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் துவாரகநாத்சிங்உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Jun 2021 1:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!