இராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்; கபசுரக் குடிநீர் வழங்கல்

இராசிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு  பிரச்சாரம்; கபசுரக் குடிநீர் வழங்கல்
X

இராசிபுரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இராசிபுரம் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இøதையொட்டி இராசிபுரம் நகராட்சி பஸ் நிலையம் அருகில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், அரசு ஆஸ்பத்திரி சித்தா மருத்துவ அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி முகாமைத் தொடக்கிவைத்தனர்.

மேலும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், கபசுரப் பொடி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள் வழங்கப்பட்டன. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோனிஷா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் மணிவண்ணன், லோகநாதன், பாஸ்கர், சிவா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!