வெண்ணந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

வெண்ணந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X
Road Accident News -வெண்ணந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Road Accident News -நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மகன் சவுந்தர்ராஜன் (19). ராசிபுரம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சவுந்தர்ராஜன் தாளம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு தனது டூ வீலரில் அத்தனூர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக சேலம் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ, டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!