நாமகிரிப்பேட்டை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஷ்ரேயாசிங் திடீர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், சிறுநோய்களுக்கான சிகிச்சைகள், பிரசவ சிகிச்சை மற்றும் பேறுகால சிகிச்சைகள், லேப் வசதிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், சர்க்கரை நோய் சிகிச்சை மற்றும் கண்பரிசோதனை சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
மேலும், ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், புறநோயாளிகளின் வருகை, 2 குழந்தைகள் பெற்ற பிறகு குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட தாய்மார்களின் விவரம் ஆகியவை குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நோயாளிகளுக்கான படுக்கை வசதி, டாக்டர் அறை, கர்ப்பிணிகள் வார்டு, ரத்த பரிசோதனை அறை, முதலுதவி மற்றும் ஊசி போடும் அறை, மருந்து வழங்கும் அறை, உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, பிரசவத்திற்கு பிந்தைய கவனிப்பு பிரிவில் குழந்தை பெற்றெடுத்துள்ள தாய்மார்களை பார்வையிட்டு, அவர்களின் ஆரோக்கியம் குறித்தும், சிகிச்சையின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், பிஆர்ஓ சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் தயாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu