வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
X

பொன்பரப்பிப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொன்பரப்பிபட்டி கிராம பஞ்சாயத்தில் நடைபெற்று வரும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொன்பரப்பிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் ஸ்ரேயாசிங், பஞ்சாயத்து பகுதிகளில் மேற்கௌள்ளப்பட்ட அடிப்படை வசதிகளான சாலை வசதி, தண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலைபட்டி கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து உறிஞ்சு குழியினையும், மண்புழு தயாரிக்கும் இடத்தினையும் கலெக்டர் பார்வையிட்டார். அங்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, சமுதாய சுகாதார வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலைப்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தார். ஆய்வின் போது டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், பிடிஓ பிரபாகரன், உதவி பொறியளர் கவுரி, பஞ்சாயத்து தலைவர் கலாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story