காவிரியில் வெள்ளப்பெருக்கு: ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

River Flooding | Flood In Tamil
X
River Flooding- காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

River Flooding- காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராசிபுரம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராசிபுரம் நகராட்சி கமிஷர் அசோக்குமார் கூறியுள்ளதாவது:

நெடுங்குளம் காட்டூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு ராசிபுரம் நகராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள, நீர் உறிஞ்சும் கிணறுகளில் இருந்து, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மோட்டார்களை இயக்கி தண்ணீர் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே ஆற்றில் நீர்மட்டம் குறையும் வரை மோட்டார் இயக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் ராசிபுரம் நகராட்சி பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் குறையும் வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!