இராசிபுரம் அருகே கார் விபத்து: கார்நாடக மாநில ஐயப்ப பக்தர் சாவு

இராசிபுரம் அருகே கார் விபத்து: கார்நாடக மாநில ஐயப்ப பக்தர் சாவு
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே நடைபெற்ற விபத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கிங்கேரி பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சதீஷ் ( 35), பிரணவ் (38), அருண் (32), லட்சுமிகாந்த் (42), சந்தோஷ்குமார் (34), லோகேஷ் ஆகிய 6 பேர் ஒரு காரில், சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். காரை லட்சுமிகாந்த் ஓட்டி சென்றார்.

சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சம்பவத்தன்று, இராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூனுசாவடி அருகே வந்தபோது, அவர்கள் வந்த காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரின் அடியில் சிக்கிய ஐய்யப்ப பக்தர் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும்வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சிக்கிய சதீஷ், பிரணவ், அருண், லோகேஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!