பிளஸ் 2 மாணவிக்கு குழந்தை பிறந்தது: கொல்லிமலை வாலிபர் போக்சோவில் கைது

பிளஸ் 2 மாணவிக்கு குழந்தை பிறந்தது: கொல்லிமலை வாலிபர் போக்சோவில் கைது
X
பிளஸ் 2 மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், கொல்லிமலையைச் சேர்ந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, குண்டலிநாடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (20). இவர், நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். பின்னர் அவரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி அவர் ராசிபுரம் கிளை சிறையில் அடைகப்பட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!