ரோட்டரி சங்கம் சார்பில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு பேரணி
ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும், உடல் நலம் குறித்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு இராசிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் 2982, பப்ளிக் இமேஜ் திட்டத்தின் சார்பில், தனி மனித உடல் நலமே தேசத்தின் நலன் என்ற தலைப்பிலான உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2,500 கி.மீ மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பேரணி நடைபெற்று வருகிறது.
கடந்த 19ஆம் தேதி ஏற்காட்டில் துவக்கி வைக்கப்பட்ட இந்த பேரணி ராசிபுரம் வந்தடைந்தது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இந்த பேரணிக்கு, ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ரோட்டரி கவர்னர் சுந்தரலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரணியை துவக்கிவைத்தார்.
இந்த பேரணி ராசிபுரத்தில் புறப்பட்டு உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், பாண்டிச்சேரி திண்டிவனம் சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓமலூர், சேலம், சங்ககிரி, கோபி, கோவை, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்றடைந்து மீண்டும் சேலம் வந்தடையும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ரோட்டரி பப்ளிக் இமேஜ் சேர்மன் பாலாஜி, மாவட்ட ரோட்டரி கவர்னர் (தேர்வு) சரவணன், முன்னாள் துணை கவர்னர் வள்ளுவன், ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன், திட்ட சேர்மேன் சிவகுமார் ஏற்பாடு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu