ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரம் பகுதியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி தினமான விழா நடைபெற்றது. மண் காப்போம் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. ராசிபுரம் ஈஷா தன்னார்வ தொண்டர்கள், திருவள்ளுவர் அரசு கல்லூரி என்சிசி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மண் வளம் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் அரசுக் கல்லூரி என்சிசி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மண் வளப் பாதுகாப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராசிபுரம் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா, மற்றும் அன்பழகன், தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai marketing future