இராசிபுரத்தைச் சேர்ந்த டாக்டருக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான கலைஞர் விருது

இராசிபுரத்தைச் சேர்ந்த டாக்டருக்கு சிறந்த மருத்துவ சேவையைப் பாராட்டி கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தங்கராஜூ, இவர் சேலம், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவரது 33 ஆண்டுகால மருத்துவச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம், தமிழ்நாடு கல்வி ஆலோசகர் நலச்சங்கம் ஆகியவை கலைஞர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான கலைஞர் விருது வழங்கும் விழாவில், மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு, கலைஞர் விருதை டாக்டர் தங்கராஜுக்கு வழங்கி பாராட்டினார். விருது பெற்ற டாக்டருக்கு பல்வேறு துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business