ராசிபுரம்: கூட்டுறவு சொசைட்டியில் ரூ.85 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை

ராசிபுரம்: கூட்டுறவு சொசைட்டியில் ரூ.85 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை
X
ராசிபுரம் அருகே கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (ஆர்சிஎம்எஸ்) சார்பில், அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில், வாரம்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. ராசிபுரம், குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம், மின்னக்கல், நாமகிரிப்பேட்டை, அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு, பருத்தியை கொள்முதல் செய்கின்றனர்.

நேற்று நடந்த ஏலத்திற்கு 2,480 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்து 999 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 9க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக விலைக்கு பருத்தி விற்பனையனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil