அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 14 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்கத்தில்  ரூ. 14 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
X
அக்கரைப்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் ரூ.14 லட்சம் மதிப்பிலான பருத்தி, ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்சிஎம்எஎம் கூட்டுறவு சொசைட்டி சார்பில், அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில், பருத்தி ஏலம் நேற்று மாலை நடந்தது. இந்த ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம், மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

நேரடி ஏலத்தில் ஈரோடு, திண்டுக்கல், கோவை, அவிநாசி, திருப்பூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் 439 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில், ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி ரூ.7 ஆயிரத்து 777 முதல், ரூ.8 ஆயிரத்து 589-க்கு விற்பனையானது. மொத்தம் 439 பருத்தி மூட்டைகள் ரூ.14 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.

Tags

Next Story
ai future project