இராசிபுரம் அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் திமுகவில் ஐக்கியம்

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு அதிமுக பஞ்சாயத்து தலைவர் ரங்கசாமி, அக்கட்சியில் இருந்து விலகி, திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைக்கிணறு பஞ்சாயத்து தலைவராக ரங்கசாமி பணியாற்றி வருகிறர். அதிமுக பிரமுகரான அவர் அக்கட்சியில் இருந்து விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் ராமசுவாமி, வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி, திமுக பிரமுகர்கள் பாலச்சந்திரன், ஜெகதீசன், ரவி, சேகர், சிவலிங்கம் , வெங்கடாசலம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu