இராசிபுரம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

இராசிபுரம் அருகே டிராக்டரில் இருந்து  தவறி விழுந்து பெண் பலி
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.

இராசிபுரம் அருகே உள்ள அத்திப்பலகானூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி மாலதி (45). சம்பவத்தன்று காலை ஜெயராமன், அத்திப்பலகானூரில் இருந்து, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பப்பட்டிக்கு கருங்கற்களை ஏற்றிக் கொண்டு டிராக்டரை ஓட்டிச் சென்றார். டிராக்டரில் அவருடைய மனைவி மாலதியும் அமர்ந்து சென்றார். பின்னர் கருங்கற்களை தொப்பம்பட்டி பகுதியில் இறக்கி விட்டு இராசிபுரம் நோக்கி திரும்பி வந்தனர்.

நாமகிரிப்பேட்டை அருகே வேலம்பாளையம் அருகே வந்தபோது, வேகத்தடை மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதனால் நிலை தடுமாறிய மாலதி, கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிசிச்சைக்காக இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாலதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!