7 ஆடுகளை வேட்டையாடிய வெறிநாய்கள்

7 ஆடுகளை வேட்டையாடிய வெறிநாய்கள்
X
இராசிபுரம் அருகே ஏழு ஆடுகளை வேட்டையாடிய வெறிநாய்கள்

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அடுத்துள்ள புதுச்சத்திரம் அடுத்த அம்மாபாளையம் புதூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்தில் இன்று காலை வழக்கம் போல் 10 ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டி உள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற நிலையில், அப்போது அங்கு வந்த 6 க்கும் மேற்ட்ட வெறிநாய்கள் ஆடுகளை கழுத்து மற்றும் தொடையில் கடித்தன. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதே போல அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணன, பெரியண்ணன் என்பவர்களுக்கு சொந்தமான ஆடுகளை கடித்தன. இதில் ஆடுகள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தங்கள் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி திரிவதாகவும் வயல் பகுதிகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது நாய்கள் கடித்து விடுவதாகவும் இதன்காரணமாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!