வாகன திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது
X

ராசிபுரத்தில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக வந்த தகவலையடுத்து போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் பிடிபட்டவர்கள் ஆத்தூரை அடுத்த சிறுவாச்சூரை சேர்ந்த ரவிக்குமார்(45), பரமத்தி வேலூரை சேர்ந்த பூபாலன்(22) என்பது தெரிந்தது. மேலும், இவர்கள் கங்கவள்ளியை சேர்ந்த தனபால் (23) மற்றும் கோபிநாத் (22) ஆகியோருடன் சேர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல இடங்களில், இருந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது