கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் பறவைக்காய்ச்சல்: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
X

கோழிப்பண்ணை (கோப்புப்படம்)

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவுவதையடுத்து நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினசரி சுமார் 1 கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அவ்வப்போது ஏற்படும் பறவை காய்ச்சல் நோய் தமிழக பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி திருவனந்தபுரம் பெருமாங்குழி பகுதியில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சுமார் 2 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழிக்க முடிவு செய்துள்ள கேரள அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால் தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என கோழிப்பண்ணை நடத்துபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலைக்கு பறவை காய்ச்சல் நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுநர் குழு தெரிவித்திருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil