நாமக்கலில் குடிநீர் குழாய் உடைப்பு

நாமக்கலில் குடிநீர் குழாய் உடைப்பு
X
குழாயில் உடைப்பு, வாகன விபத்து அபாயம், நாமக்கல் மக்களின் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை தேவை

குடிநீர் குழாயில் உடைப்பு: அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக மோகனூர், ஜேடர்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடியிருப்புகளுக்குத் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. குறிப்பாக நாமக்கல்-திருச்சி சாலையில் அரசு சட்டக்கல்லூரி எதிரே உள்ள சிவஞானம் தெருவில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதன் காரணமாக கணேசபுரம், துறையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், குழாய் உடைந்துள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள குழியால் வாகன விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை அடையாளப்படுத்த அப்பகுதி மக்கள் தென்னை மட்டைகளை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, கணேசபுரம், சிவஞானம் தெரு பகுதி மக்களின் நலன் கருதியும், குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் உடைந்துள்ள குடிநீர் குழாயை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story