பரமத்தி வேலூர் அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது

பரமத்தி வேலூர் அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது
X

பைல் படம்.

அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

மாணிக்கம்பாளையத்தில் இருந்து கோலாரம் செல்லும் அரசு டவுன் பஸ், பயனிகளுடன் புள்ளாகவுண்டம்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்றது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் திடீரென டவுன் பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர். இதை தட்டிக் கேட்ட பஸ் டிரைவர் குமார் (46) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து பஸ் டிரைவர் குமார் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சை சேதப்படுத்தியவர்களை பிடிக்க முயன்றபோது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் வசந்தகுமார் (22), அத்தப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது. இதையொட்டி அரசு பஸ்சை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, தப்பியோடிய சவுந்தர் என்ற பிரதீப்பை (21) தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்