மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி

மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை முயற்சி
X
பரமத்தி அருகே மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சி செய்தவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கோனூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் ராஜூ என்கிற வரதராஜ் (65). கூலித் தொழிலாளியான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் பெருமாம்பாளையம் எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்த சம்பூர்ணம் (55) என்பவரை வரதராஜ் திருமணம் செய்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 16-ந் தேதி அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்து வரதராஜ், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி சம்பூர்ணத்தை தாக்கியுள்ளார். மயங்கிய நிலையில் சம்பூரணம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே, மனைவியை தாக்கியதால், போலீசார் கைது செய்வார்கள் என்ற பயத்தில் வரதராஜ் வீட்டை பூட்டிக் கொண்டு வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். மயக்கமடைந்த அவரை உறவனர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சம்பூரணம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையயொட்டி, பரமத்தி போலீசார் வரதராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதராஜூக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தெடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!