பரமத்திவேலூரில் பெண் தீக்குளித்து தற்கொலை

பரமத்திவேலூரில் பெண் தீக்குளித்து தற்கொலை
X
பரமத்திவேலூரில் குடும்ப தகராறு காரணமாக, பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர் பாவடி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி ஈஸ்வரி (45). குழந்தைகள் இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, அவர்களுக்கு இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஈஸ்வரி, சமையல் அறைக்கு சென்று, திடீரென மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில், தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதில், ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து, பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு