ப.வேலூரில் மின் கம்பத்தில் டூவீலர் மோதி விபத்து: தலையணை வியாபாரி சாவு

ப.வேலூரில் மின் கம்பத்தில் டூவீலர் மோதி விபத்து: தலையணை வியாபாரி சாவு
X

பைல் படம்

பரமத்திவேலூரில் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையணை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (39). இவர் தலையணை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி சிவக்குமார் தலையணைகளை விற்பனை செய்ய கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

பரமத்திவேலூர் காவிரி புதிய பாலத்தில் சென்றுகொ ண்டிருந்தபோது, அவரது டூ வீலர் நிலைத்தடுமாறி ரோட்ரோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்ததில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!