ப.வேலூர் அருகே மினி லாரி மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு

ப.வேலூர் அருகே மினி லாரி மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

Today Accident News In Tamil Nadu- -பரமத்திவேலூர் அருகே மினி லாரி மோதியாதல், டூ வீலரில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Today Accident News In Tamil Nadu - பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு காமராஜர் நகரை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் தனசேகரன் (30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி தனது டூ வீலரில் பரமத்திவேலூர் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். நன்செய் இடையாறு செல்லும் புதுரோட்டில் வந்துகொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த மினி லாரி ஒன்று டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி தனசேரன் உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story