பரமத்தி வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 20 லிட்டர் ஊறல் அழிப்பு

பரமத்தி வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது: 20 லிட்டர் ஊறல் அழிப்பு
X

பைல் படம்.

பரமத்தி வேலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்; 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில், பிள்ளைக்களத்தூர் செல்லும் ரோட்டில் திருமணிமுத்தாறு கரையோர பகுதியில் சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பூர்ணிமா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காட்டில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் மாவுரெட்டிபகுதியை சேர்ந்த கந்தசாமி (63), பிள்ளைகளத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 20 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது