கந்தாம்பாளையம்: டூ வீலர்- லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலி

கந்தாம்பாளையம்:  டூ வீலர்- லாரி மோதிய விபத்தில்  மின்வாரிய ஊழியர் பலி
X
கந்தாம்பாளையம் அருகே, டூ வீலர் மீது லாரி மோதி விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

பரமத்தி வேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே உள்ள கோதூர் உத்திக்காபாளையத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் விக்னேஷ் (25). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கவுசல்யா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

சம்பவத்தன்று விக்னேஷ் வேலையை முடித்து விட்டு தனது டூ வீலரில் வீட்டுக்கு திரும்பி சென்றார். உலகபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றபோது, எதிர் திசையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி டூ வீலரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் மாவட்டம் சித்தூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!