பரமத்தியில் இருசக்கர வாகனம் மீது டூரிஸ்ட் வேன் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு

பரமத்தியில் இருசக்கர வாகனம் மீது டூரிஸ்ட் வேன் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு
X
பரமத்தி அருகே வேன் மோதியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

பரமத்தி அருகே வேன் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன். இவரது மகன் ராஜசேகரன் (31). சம்பவத்தன்று இவர், தனது டூ வீலரில், மாவுரெட்டியில் இருந்து பரமத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே சென்றபோது, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற கார் ராஜசேகரன் வந்த டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த ராஜேசேகரன் மயக்கமடைந்து ரோட்டோரம் விழுந்தார். அப்போது, அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று ராஜசேகரன் மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!