விவசாயி வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.40 ஆயிரம் திருட்டு

விவசாயி வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.40 ஆயிரம் திருட்டு
X

பைல் படம்.

விவசாயி வங்கிக் கணக்கில் இருந்து, நூதன முறையில் ரூ.40 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருக்கூர் காக்காயன் தோட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, விவசாயி. இவர் நேற்று மதியம் பரமத்தி வேலூர் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்படட் பேங்க் ஏடிஎம்மில் பணம் எடுக்க முற்பட்டுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. அப்போது அவரது பின்னால் நின்றிருந்த மர்மநபர் அவரது கார்டை வாங்கி பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பாலசுப்பிரமணி கார்டை தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவரது கார்டு போல் மற்றொரு கார்டை அம்மர்மநபர் வழங்கியுள்ளார். அதைப்பெற்ற விவசாயி பாலசுப்ரமணி அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ரூ. 40 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் தகவல வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி அவரது வங்கி ஏடிஎம் கார்டை பார்த்தபோது, அந்த கார்டு மாற்றப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து வங்கி ஏடிஎம் கார்டை அவர் தனது மகன் மூலம் லாக் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேறுறொரு ஏடிஎம்பில் பாலசுப்பிரமணி வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட விவரம் தெரியவந்தது. நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story