நாமக்கல் மாவட்டத்தில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 50,000 பேரை சேர்க்க இலக்கு

பைல் படம்.
நாமக்கல் மாவட்டத்தில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 50 ஆயிரம் பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்தாக கோட்ட அஞ்சலக அதிகாரி கூறினார்.
நாமக்கல் கோட்ட தபால்துறை சார்பில் ப.வேலூர் அருகில் உள்ள எஸ்.வாழவந்தியில், அடல் பென்சன் யோஜனா, திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கே.புதுப்பாளையம் கிளை அஞ்சலக அதிகாரி தர்மலிங்கம் தலைமை வகித்தார். பாலப்பட்டி துணை அஞ்சல் அதிகாரி கணேசன் வரவேற்றார்.
நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், 9 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்களும், பெண்களும் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரலாம். தங்களுக்கான பென்ஷன் தொகையை அவர்களே தீர்மானித்து அதற்கான பிரீமியத்தை அவரவர் சேமிப்புக் கணக்கிலிருந்து செலுத்தலாம்.
இத்திட்டம் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் விவசாய குடும்பங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தினசரி ரூ.7 செலுத்தினால் 60 ஆண்டுகள் கழித்து மாதம் 5,000 பென்ஷன் கிடைக்கும். பின்னர் அவர்களின் வாரிசுகளுக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கிடைக்கும்.
எஸ்.வாழவந்தி கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக தத்தெடுத்து அங்கு உள்ள 19 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சேர்க்கவும், நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் 50 ஆயிரம் அடல் பென்சனர் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாமக்கல் கோட்ட வணிகப் பிரிவு அதிகாரி சிவக்குமார், கோட்ட அஞ்சலக அதிகாரி கார்த்திக், , போஸ்டல் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.வாழவந்தி பஞ்சாயத்து தலைவர் குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தபால்துறை அலுவலர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu