பரமத்தி அருகே குடிநீர் வழங்கக்கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பரமத்தி அருகே குடிநீர் வழங்கக்கோரி, ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முற்றுகை
X


பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாெதுமக்கள்.

பரமத்தி அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, வில்லிபாளையம் பஞ்சாயத்து, ஜங்கம நாயக்கம்பட்டி பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

பின்னர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராமன் தலைமையில், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் தங்கமணி மற்றும் அரசியல் கட்சியினர் திரளான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

கோரிக்கை மனுவில், வில்லிபாளையம் கிராமம், ஜங்கம நாயக்கன்பட்டியில் உள்ள 3 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக அப்பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், அதிகாரிகள் உடனடயாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆ.15 சுதந்திர தினத்தன்று தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!