ஈரோடு காவிரியில் மூழ்கி இறந்தவரின் உடல் சோழசிராமணியில் மீட்பு

பைல் படம்.
Kaveri River Dam -நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா சோழசிராமணி கதவணையின் 2-வது மதகு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி நாராயணன் மகன் பரசுராமன் (30) என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
பரசுராமன் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் அடித்து செல்லப்பட்டு, அவரது உடல் சோழசிராமணி கதவணையில் ஒதுங்கியது தெரியவந்தது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu