ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன் (25). இவருடைய மனைவி ராஜகுமாரி (22). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன், மனைவி இவருவரும், நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தில், சண்முகசுந்தரம் என்பவரின் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி, தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராஜகுமாரி, சம்பவத்தன்று வீட்டுக்குள் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மோகன், அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் திருச்செங்கோடு சப்கலெக்டர் இளவரசி இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!