ப.வேலூர் அருகே குடும்ப தகராறால் இளம்பெண் தற்கொலை

ப.வேலூர் அருகே குடும்ப தகராறால் இளம்பெண் தற்கொலை
X

பைல் படம்.

ப.வேலூர் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர் தாலுக்கா, கொந்தளம் அருகில் உள்ள மீனாட்சிபாளையம், பச்சபாளி பகுதியை சேர்ந்தவர் சிவா (30), கூலித்தொழிலாளி. இவர் ராதிகா (27) என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் சுகதீபன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 5ம் தேதி அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ராதிகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதைக் கண்ட அவரது கணவர், அவரை ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 4 ஆண்டுகளில் இளம்பெண் இறந்தது குறித்து திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்