பரமத்தி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
கோப்பு படம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள தேவிபாளையத்தை சேர்ந்தவர் பாபா. இவருடைய மகன் சந்தோஷ்குமார் (31). இவர் பரமத்தி அருகே பஞ்சப்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சந்தோஷ்குமார், சம்பவத்தன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu