பரமத்தி அருகே கிணற்றில் குதித்து ரேஷன் கடை பணியாளர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (50), பரமத்தியில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி திவ்யா (38). இவர்களுக்கு லிஜித் (14) என்ற மகனும், ஸ்ரீதிகா (8) என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வீடு திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை, அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த, பொது கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றவர்கள், அதில் ஆண் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசார், தீயைணப்பு துறைக்கு தகவல் அளித்தனர். வேலாயுதம்பாளையம் நிலைய அலுவலர் முருகன் தலைமையில், அங்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் கிடந்த சடலத்தை மீட்டனர். அது, ரேசன் கடை பணியாளர் கந்தசாமியின் உடல் என்பது தெரிவந்தது. பின்னர் உடல் ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu