கந்தம்பாளையம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கந்தம்பாளையம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
X
கந்தம்பாளையம் அரகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தபாளையம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு, இவரது மகன் பிரபாகரன் (33). இவர் கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் பணியாற்றி வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சைக்கு செல்ல பிரபாகரனிடம் போதிய பண வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரபாகரன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது