பரமத்திவேலூர் பேக்கரியில் திடீர் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்

பரமத்திவேலூர் பேக்கரியில் திடீர் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
X

பரமத்திவேலூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பேக்கரியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

பரமத்திவேலூர் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பழைய பைபாஸ் ரோட்டில் தனியார் பேக்கரி கடை உள்ளது. இக்கடையின் பணியாளர்கள் இன்று காலை வழக்கம்போல் பணிகளை மேற்கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் மேல் மாடியில் இயங்கி வந்த இனிப்பு,காரம் தயாரிக்கும் பிரிவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

பணியாளர்களின் அலறல் சத்தம் கேட்டு கடையில் இருந்தவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். அங்கிருந்தவர்கள் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், பரமத்தி வேலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இதனால் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பேக்கரியில் இருந்த சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்த பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!