கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு காய்கறி, மலர் பயிரிட மானியம் வழங்கல்

கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு காய்கறி,  மலர் பயிரிட மானியம் வழங்கல்
X
பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலை வட்டாரத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் பயிர் செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலை வட்டாரத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் பயிர் செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், காய்கறி விதைகள், சின்ன வெங்காய நாற்றுகள், வாழைத்தார் உறை மற்றும் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அங்கக முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 5,000, அங்ககச் சான்றிதழ் பெற ரூ. 500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, புடலை, பீர்க்கன், பாகல் மற்றும் மலர் பயிர்களான மல்லிகை, சம்பங்கி ஆகியவை சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம் அல்லது கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!