கபிலர்மலை பகுதியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கல்

கபிலர்மலைப் பகுதியில் மண் பரிசோதணை செய்து, விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை வட்டாரம், கொத்தமங்கலம் கிராமத்தில், திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் மண் ஆய்வு முகாம் நடந்தது.

இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளிடம், கபிலர்மலை வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி, மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப பயிரிட்டு ரசாயன உரங்களை குறைத்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கினார்.

மேலும், விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டது. வேளாண் அலுவலர்கள் சவுந்தர்ராஜன், அன்புச்செல்வி, அருள்ராணி, உதவி வேளாண் அலுவலர் ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!