பொத்தனூரில் 'கல்வி எனது கனவு' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை

பொத்தனூரில் கல்வி எனது கனவு திட்டத்தின் கீழ்  மாணவர்களுக்கு உதவித்தொகை
X

பொத்தனூரில் கல்வி எனது கனவுத்திட்டத்தின் கீழ்,  மாணவர்களுக்கு உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.

பொத்தனூரில், கல்வி எனது கனவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள, பொத்தனூர் வேர்டு நிறுவனம் மற்றும் சென்னை சோழமண்டலம் நிதி நிறுவனங்கள் இணைந்து கல்வி எனது கனவு என் திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழமண்டலம் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் திட்ட மேலாளர் கீதாதேவி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கந்தசாமி கண்டர் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் லோகநாதன், வேர்டு நிறுவன ஆலோசகர் ராதா சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

மாவட்ட அளவில் 3வது ஆண்டாக, லாரி டிரைவர்களின் குழந்தைகள் மற்றும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. முன்னதாக வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா நன்றி கூறினார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா