பரமத்தி டவுன் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு சவுராஷ்டிரா சங்கம் பாராட்டு

பரமத்தி டவுன் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு சவுராஷ்டிரா சங்கம் பாராட்டு
X

பரமத்தி சவுராஷ்டிரா சபா சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், டவுன் பஞ்சாயத்து தலைவர் மணி பேசினார்.

பரமத்தி சவுராஷ்டிரா சபா சார்பில், பரமத்தி பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சவுராஷ்டிரா சபா சார்பில், பரமத்தி டவுன் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சவுராஷ்டிரா சபா தலைவர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் மணி, உதவி தலைவர் ரமேஷ்பாபு மற்றும் வார்டு கவுன்சிலர்களைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல்லில் இருந்து பைபாஸ் வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் பரமத்தி நகருக்குள் வந்து செல்லவேண்டும், பைபாஸ் ரோட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும், பரமத்தியில் உள்ள சின்னகுளத்தை சீரமைத்து பூங்கா அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சவுராஷ்டிரா சங்க முன்னாள் தலைவர் தியாகராஜன், நிர்வாகிகள் லட்சுமணன், சுரேஷ், சக்திகணேஷ், கண்ணன், ரமேஷ் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி