சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் வைக்கப்படும் கலசங்களுக்கு சிறப்பு பூஜை

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்தில்  வைக்கப்படும் கலசங்களுக்கு சிறப்பு பூஜை
X

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் வைக்கப்பட உள்ள கோபுரங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் வைக்கப்படும் கலசங்களுக்கு ப வேலூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 108 அடி உயர் ராஜகோபுரம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 6ம் தேதி இந்த கோயிலில் கும்பாபிகேம் நடைபெற உள்ளது. 7 நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்துக்கு, நேர்த்தி கடனாக 7 கோபுர கலசங்கள் வழங்கும் பணி பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையார் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இந்த கோபுர கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த தொழிலதிபர்கள் பொன்னர், சங்கர் ஆகிய சகோதரர்கள் வழங்கியுள்ளனர்.

செம்பு உலோகத்தால் உருவாக்கப்பட்ட கலசங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 அடி அடி உயரம் கொண்டவை. இந்த கலசங்களுக்கு, நன்செய் இடையாறில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர், கலசங்கள் எடுத்துச் செல்லப்படும் லாரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட அந்த வாகனம் பக்தர்கள் தரிசனத்திற்காக பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர் மலை, பரமத்தி, நாமக்கல், மோகனூர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் முசிறி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றடையும். வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் கோபுர கலசங்களை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story